புதியவை

6/recent/ticker-posts


 

செறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 205வது திருவிழா (படங்கள்)

உள்ள திருச்சிலுவை திருத்தலத்தின் 205வது வருடாந்த பெருவிழாவானது கடந்த 15.09.2013 அன்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கபட்டது. திருவிழாவின் முதல் திருப்பலியனது காலை 5.45
மணிக்கு எம் பங்குத்தந்தை A.Jesuthasan அடிகளாரினால் ஒப்புகொடுக்கபட்டது. 2வது திருவிழா திருப்பலியானது எம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய யோசப் பொன்னையா ஆண்டகை அவர்களினால் காலை 7.15மணியளவில் ஒப்புகொடுக்கப்பட்டது. இத்திருப்பலியில் கலந்துகொண்ட திருச்சிலுவை நாதரின் பக்தர்கள் எண்ணிலடங்காதவை. திருவிழாவை நிறைவு செயும் வண்ணம் வட்டாரக்கொடிகள் பக்தர்களின் ஆராவாரங்களோடு இறக்கி வைக்கப்பட்டு திருவிழா திருப்பலி முடிவடைந்தது. பின் சொறிக்கல்முனை மக்களால் 09.08.2013 அன்று அரங்கேறிய ''சத்தியநாதன் நாட்டுக்கூத்து'' இற்கான இறுவெட்டு எம் ஆயர் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. பல மக்கள் ஆவலுடன் இதனைப் பெற்றுக்கொண்டனர்.. பின் திருசிலுவைப்பண்டமானது பக்க்தர்களின் நேர்த்திக்காக வெளியில் எடுத்து வைக்கப்பட்டது. எல்லோரும் ஜேசு மரித்த திருச்சிலுவை மீது கை வைத்து தம் குறை நிறைகளை ஜேசுவிடம் ஒப்படைத்தனர். பின் மக்கள் தம் நேர்த்திகளை திருச்சிலுவை நாதருக்கு ஒப்புக் கொடுத்தனர்.
பின் திருவிழாக்காண வந்திருந்த பக்தர்களின் வைராரும் வகையில், எல்லோருக்கும் சொறிக்கல்முனை வாழ் மக்களினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் கொடுக்கப்பட்டது. எல்லோரும் விரார உண்டு நன்ரயுனர்வுடனும் மன நிறைவுடனும் திருவிழா நிறைவு பெற்று வீடு சென்றனர். பின் திருவிழா நாளினை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் எம் பங்குத்தந்தையினாலும் பங்கின் சிறார்களினாலும் மாலை களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.... இக்களியாட்ட நிகழ்வுகள் மாலை 4மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை மகிச்சியுடன் இடம்பெற்றது. பங்கின் சிறியவர் முதல் பெரியவர் வரை இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தமது 205வது திருச்சிலுவை திருத்தல பெருவிழா கொண்டாட்டத்தினை நிறைவு செய்தனர்.... இவ் 205வது திருச்சிலுவை திருத்தல பெருவிழா சிறப்புடன் நிறைவு பெற ஒத்துழைத்த எம் பாசமிகு பங்குத்தந்தை A.Jesuthasan அடிகளாருக்கும் அருட்சகோதரர் நோட்டன் அவர்களுக்கும் அருட்சகோதரிகள் மற்றும் கிராம இளைஞர் யுவதிகள் சிறார்கள் பங்கு மக்கள் வெளியிடத்து சொறிகல்முனை வாழ் இறைமக்கள் அனைவருக்கும் எம் திருச்சிலுவை சமூகம் சார்பில் நன்றிகளையும் திருச்சிலுவை நாதரின் ஆசீர்களையும் கூறிக்கொள்கின்றோம்.... உங்களுக்காக சில திருவிழா படங்கள்.....