இன்று நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைச் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வுகள்
சகல பாடசாலைகளிலும் நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு வினாப்பத்திரத்திற்கும் 30 புள்ளிகளையோ அல்லது அதற்கு கூடுதலாகப் பெற்று பரீட்சையில் மொத்தமாக 70 புள்ளிகளையோ அதற்கும் அதிகமாகவோ அடைந்து சித்திபெற்றமைக்காக இத் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த வகையில் பட்டிருப்பு வலயத்திலுள்ள மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் அதிபர் ஆ.சிவசம்பு தலைமையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி அட்டைகள் வழங்கி; கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பட்டிருப்பு வலய ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி ச.தில்லைநாதன் அவர்களும் கலந்து சித்தி பெற்ற மாணவர்களையும் அதற்குத் துணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினர்