புதியவை

6/recent/ticker-posts


 

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய பணித்தது அவரது மனைவியே! பரபரப்பு தகவல்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு
பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 09mm வர்க்க துப்பாக்கியும் 11 ரவைகளும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.


வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு பொய் தகவல் வழங்கிய நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிடம் குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணை மூலம் அனைத்து உண்மைத் தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் கொலை! சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு


நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கொலையுடன் தொடர்புடைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன், கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்சியனின் மனைவி றெக்சியன் அனிதா மற்றும் லண்டன் சசிந்திரன் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படுகொலை சம்பந்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவைச் சேர்ந்த சசிந்திரன் என்பவர் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் நேற்று கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் பிரதேச சபைத் தலைவரின் மனைவியான அனிதா றெக்சியனும் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரையும் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.