புதியவை

6/recent/ticker-posts


 

பெண்ணொருவரின் கையைப் பிடித்தவருக்கு ஏழு மாதம் கட்டாய சிறைதண்டனை

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இரவு நேரத்தில் வீடு
உடைத்து திருடியமை, மற்றும் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து 28 வயதுடைய பெண்ணொருவரின் கையைப் பிடித்த நபர் ஒருவருக்கு ஏழு மாத கால கட்டாய  சிறைதண்டனையும் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.        
                          

கிண்ணியா மதினாநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  குறித்த நகர் கிண்ணியாப் பிரதேசத்தில் கடந்த வருடம் இரவு நேரத்தில் வீடு உடைத்து தொலைக்காட்சிப் பெட்டி மற்றும்  வீட்டு உபகரணங்கள் திருடியமை மற்றும் கிண்ணியாப் பிரதேசத்தில் அனுமதியின்றி வீடொன்றினுள் புகுந்து 28 வயதுடைய பெண்ணொருவரின் கையைப் பிடித்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபருக்கெதிராக கிண்ணியாப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஏழு மாதம் கட்டாய  சிறைதண்டனையும்,பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் அத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒருமாதம் சிறைதண்டனையையும் விதித்து  திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.