புதியவை

6/recent/ticker-posts


 

இளம் இயக்குனர் டோமாசனின் இயக்கத்தில் சிலோன் குறுந்திரைப்படம்

 

இளம் இயக்குனரான டோமாசன் இதற்கு முன்னர் வினா எனும் குறுந்திரைப்படத்தினை இயக்கியிருந்தார். வளர்ந்துவரும் கல்முனை  படைப்பாளிகளில் தற்போது இவரும் ஒரு இயக்குனராக தனது நாமத்தினை பதித்திருப்பது பெருமையான விடயமாகும். அத்துடன் தற்போது இவர் இயக்கியுள்ள சிலோன் எனும் குறுந்திரைப்படமானது தற்கால இலங்கையில் ஒரு குடும்பம் படும் பாடினையும் இப்பொருளாதார பிரட்சனையால் அவர்கள் எடுக்கும் முடிவினையும் சிறப்பாக சித்தரித்துள்ளார். அத்துடன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு, வடிவமைப்பு மிகச்சிறப்பாக அமையப்பெற்றுள்ளது இதற்குரிய பெருமை எடிட்டர் அருன்சாகரைச் சேரும். இக் குறுந்திரைப்படத்தின் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக தங்கள் கடமையை செவ்வேனே செய்துள்ளனர். எமது தளத்தின் சார்பில் இப்படக்குழுவினருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வாசகர்களாகிய நீங்களும் இவர்களின் படைப்பை கீழ் உள்ள லிங் ஊடாக பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கு பகிர்ந்து எமது இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்கள் கடமைகளைச் செய்வீர்கள் என நம்புகின்றோம்.




இயக்குனரின் முன்னைய படைப்பு