கல்முனை திரு இருதயநாதர் ஆலய வருடாந்த ஒளிவிழாவானது இன்று (18.12.2022) மாலை 3:30 மணியளவில் கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் ஆரம்பமானது. கல்முனைப் பங்கின் பங்குத்தந்தை அருட்தந்தை தேவதாசன் அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பங்கில் வசிக்கும் மிகவும் வயது முதிர்ந்த இரு பாட்டிகளை அழைத்திருந்ததுடன் நத்தார் தாத்தா பழைய காலங்களில் செய்ததுபோல் வருமைப்பட்ட இரு குடும்பங்களுக்கான பரிசுப் போதிகள் வழங்கிவைத்ததும் சிறப்பான விடயமாகவும் தற்காலத்திற்கு பழமையை எடுத்துழைக்கும் விடயமாகவும் அமைந்தது. மறைக்கல்வி மாணவர்கள் வகுப்பு ரீதியாக வழங்கிய நாடகங்கள், ஆடல் பாடல்களும் மறையாசிரியர்களின் கலைநிகழ்சிசிகளும் இவ்விழாவை மிகவும் மெருகூட்டியது. இவ்விழாவில் சாதாரணதர மற்றும் உயர்தரத்தில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மறைக்கல்வி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மறைபங்கின் ஏராளமான மக்கள் இந் நிகழ்வை கண்டுகளிப்பதற்காக வருகை தந்திருந்தனர். மாணவர்களை மிகவும் நேர்த்தியாக பயிற்றுவித்திருந்தனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஊக்குவித்த விதமும் மிகவும் சிறப்பானதாக இங்கு காணக்கூடியதாக இருந்தது.