ஜனாதிபதி தேர்தல் 2024
என்னை பொறுத்த வரை இவை அனைத்தையும் எமக்கு செய்யக்கூடியவர்கள் யார் என்பதை சிந்தித்து வாக்களிப்பது சிறப்பு
* எமது நீண்ட கால கோரிக்கையினை நிவர்த்தி செய்து அதனை சரியான முறையில் நிவர்த்தி செய்யக்கூடியவர்கள் யார்
* எமது பிரதேசம் அனைத்து வீதிகளும் செப்பமிடப்பட வேண்டும்
* இளைஞர்,யுவதிகள் , தொழில் இல்லாத எம் சகோதரம் அனைவருக்கும் தொழில் வாய்ப்பை ஓரளவு பெற்றுக்கொடுக்க தகுதியானவர்கள்
* எமது பிரதேசத்தில் மைதானங்கள் புனரமைக்க வேண்டும் அல்லது பிரதேசத்தில் சரியான ஒரு மைதானம் உருவாக்கப்பட வேண்டும்.
* எமது பிரதேசத்தில் கிரிக்கெட் மேலோங்கி காணப்படுவதால் கடினப்பந்து மேலோங்கி வருவதற்கு அதிக உதவிகள் செய்யக்கூடியவர்கள் இதன் மூலம் விளையாட்டு மூலம் வீரர்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்ப்பதற்கு முயற்சி எடுத்தல்
* அனைத்து விளையாட்டையும் மேம்படுத்த கூடிய வகையில் உள்ளக விளையாட்டு அரங்கு எமக்கு முக்கியமான ஒன்று அதனை செய்து தரக்கூடியவர்கள்
*. எமது பிரதேசத்தில் கடற்கரை பிரதேசம் இப்போது பலராலும் கவரப்பட்டு வருகிறது அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடியவர்கள்
சிறுவர் விளையாட்டுக்கள் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு சிறுவர் பூங்கா அமைத்தல் வேண்டும்
* கழிவுகளை அகற்றக்கூடிய சரியான திட்டமிடல் மூலம் எமது பிரதேசத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வழிவகுக்க வேண்டும்
* வீதி விளக்குகள் எமது பிரதேசம் எங்கும் போடப்பட வேண்டும்.
*எமது பிரதேசத்தில் வறுமையை ஒழிக்க சரியான செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வழிவகுக்க வேண்டும்
இனி வரும் காலத்தில் இவ்வாறு சிந்தித்து செயற்பட்டால் எமது பிரதேசம் முன்னேற்றம் அடையும் இல்லையேல் இன்னும் பலவற்றை இழக்க வேண்டி வரும்
இன்னும் என்ன என்ன எமது பிரதேசத்தில் உருவாக்கலாம் என்று தெரிந்தவர்கள் பதிவிடலாம்