புதியவை

6/recent/ticker-posts


 

பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் 5ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் இடம்பெற்றது.

ம்முறை , ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசுப் பரீட்சைக்கான வினாக்கள் பாடத் திட்டத்துக்கு ஏற்பவே தயாரிக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில கேள்விகள் பாடத்திட்டத்துக்கு அப்பால் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் என்.ஜே.புஸ்பகுமார மறுத்துள்ளார். 

5ம் தரப் புலமைப் பரிசுப் பரீட்சை வினாத்தாளின் 2ம் பகுதியில் இரு வினாக்கள் பாடத்திட்டத்துக்கு அப்பால் தயாரிக்கப்பட்டுள்ளதெனக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. 

எனினும் அந்த இரு கேள்விகளும் 5ம் ஆண்டுக்கான பயிற்சிப் புத்தகத்தில் உள்ள பாடத்துடன் தொடர்புடையது என , பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார். 

ஆனால் , பயிற்சிப் புத்தகத்தில் குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்களுக்கான கைந்நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கல்வித் தொழிற்சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்தார். 

அதனால் , குறித்த வினாக்கள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்திருக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். 

ஆனால் , பயிற்சிப் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் படிப்பிப்பது ஆசிரியர்களின் கடமை எனப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.