இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.