அடுத்த சில மாதங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு 30,000 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச்
சான்றிதழ்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஆட் பதிவுத் திணைக்களம் என்பன கிழக்கு மாகாண மக்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தென்னக்கோன் சுட்டிக் காட்டினார்.
ஆடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமையின் காரணமாக தேர்தலின்போது வாக்களித்தல், வங்கி கணக்கு ஆரம்பித்தல் போன்ற பல விடயங்களில் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அரச சேவையாளர்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களும் ஒன்னிணைந்து இந்த தவறை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டும் 60,000 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
.jpg)
