சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை அணியின்
நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது ஓய்வு அறிவிப்பு
கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக்குழு தலைவருக்கு அனுப்பி
வைத்துள்ளார்.
அடுத்த இருபதுக்கு - 20 போட்டிகளுக்கு அணி ஒன்றை தயார் படுத்த இலங்கை
கிரிக்கெட் நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே இந்த முடிவை
எடுத்துள்ளதாக அவர் தனது ஓய்வு கடிதத்தில் கூறியுள்ளார்.

