இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கருதி தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை அமைப்பும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பிரித்தானியாவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்பு போராட்டப் பேரணி ஒன்றை ஒழுங்கு செய்து நடத்தியது. பிரித்தானிய இலங்கை தூதரகத்தினையும் முற்றுகை இட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு பிரித்தானியாவின் இலங்கை தூதரகத்தினையும் முற்றுகை இட்டனர்.