புதியவை

6/recent/ticker-posts


 

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயிலில் கோபுரத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

 

வரலாற்றுச் சிறப்புமிக்க

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுரத்தின் திறப்பு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. துரையப்பா நவநீதராஜா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர், கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக திரு. கு. ஜெயராஜி, அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர், மற்றும் திரு. மு. அமிர்தசிங்கர், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் , ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய முன்னாள் வண்ணக்கர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அதிதிகளாக ஆலயத் தலைவர், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆலய பூசகர்கள், இந்து இளைஞர் மன்றத்தினர், பாண்டிருப்பு அனைத்து ஆலய தலைவர்கள் , மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பிரதிநிதிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கோபுரத் திறப்பு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற பூஜை மற்றும் விசேட வழிபாட்டு நிகழ்வுகளை கிரியாகால பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மயூரவதன குருக்கள் சிறப்பாக நடத்தினார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் ஆலயத்தின் ஆன்மிக மற்றும் கலைப் பாரம்பரியத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிகழ்வு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய , பிரதான நுழைவாயில் கோபுரத் திருப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வருடாந்த உற்சவம் 08.09.2026 திறக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.