புதியவை

6/recent/ticker-posts


 

பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்!

 

பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்!

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றி வரும் ஓட்டமாவடியைச்சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை (5.09.2026) பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகைப்பணம் மற்றும் அந்த வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாகக்கோரியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற அவரை உடனடியாக பணி நீக்கம் செய்த அறிவித்தல் கடிதத்தை பொலிஸ் தலைமையகம் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.