மகளின் காதல் விவகாரத்திற்கு பயந்து தாய் தந்தையர் வீட்டை விட்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவது மகள் கவிதா. இவரும் கொக்காரப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
காதலைக் கைவிடுமாறு வலியுறுத்தினர். ஆனால் கவிதா தனது காதலைக் கைவிட மறுத்து விட்டார். அதோடு நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் பிரகாஷைத்தான் மணப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.
இதனால் கடந்த 19ம் திகதி குலதெய்வம் கோவிலுக்குப் போவதாக கூறி விட்டு மனைவி விஜயாவுடன் வெளியேறினார் துரைசாமி.
ஆனால் வீடு திரும்பவில்லை. காணமல் போன துரைசாமியையும், அவரது
மனைவி விஜயாவையும், பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததை அடுத்து, அவர்களது மூத்தமகள் லலிதா புதன்கிழமை எ.பள்ளிப்பட்டி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
பொலிசாரும் மகளின் காதலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய தாய், தந்தையை தேடி வருகின்றனர்.
பொலிசாரும் மகளின் காதலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியேறிய தாய், தந்தையை தேடி வருகின்றனர்.