புதியவை

6/recent/ticker-posts


 

கல்முனைக்குடியில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மாயம்!

கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து மீன்பிடிப்பதற்காக
இரண்டு இயந்திரப் படகில் சென்ற 6 மீனவர்கள் 8 நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல ஆழ் கடலுக்குச் சென்று 2 அல்லது 3 தினங்களில் மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்புவது வழமையானது எனவும், கடந்த 24 ஆம் திகதி கல்முனைக்குடி கடற்கரையில் இருந்து இரண்டு இயந்திரப்படகில் 6 மீனவர்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர் .

 இந்த நிலையில் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 8 நாட்களாகியும் கரைக்கு திரும்பாதையடுத்து அவர்கள் கடலில் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடி மீட்டுத்தருமாறு மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.