(காரைதீவு நிருபர் சகா)ஆசிரியர் தினம்
என்றபோர்வையில் மாணவர்களிடமிருந்து சில பாடசாலைகளில் பெருந்தொகையான பணம் அறிவிடப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுகிறது.
நல்ல ஆசிரியர்கள் போற்றப்படவேண்டியவர்கள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் மிக கூடியநிதித்தொகையில் அன்பளிப்பை வழங்கவேண்டும் விருந்தை வழங்கவேண்டும் என்று சில பாடசாலைகள் உத்தரவிட்டிருப்பது குறித்து பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்தினத்திற்கென ஒரு மாணவனிடமிருந்து 1000ருபாவுக்கு மேலாக அறவிட்டுள்ள பலபாடசாலைகள் உள்ளன.
வசதிகுறைந்த பெற்றோர்களின் நிலை என்னவென்று இந்த நிருவாகங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
எத்தனையோ பாடசாலைகள் ரியுசன் வகுப்புகளில் அதே ஆசிரியரிடம் தங்கியிருக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை நிலவுகிறது.
மேலும் இன்று(5) புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறுகள் வெளியாகும்.
வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற மாணவர்களும் இதேபோன்று பணம்செலுத்தி கற்பித்தஆசிரியர்களுக்கும் பெருந்தொகை பரிசும் விருந்தும் வழங்கவேண்டிய கட்டாயத்தை நிருவாகம் ஏற்படுத்துகின்றது.
பிரத்தியேகவகப்பில் மாதமொன்றுக்கு ஒரு மாணவனுக்கு 1000ருபா வீதம் அறிவிட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.
பாடசாலையில் கற்பித்த ஆசிரியரா? ரியுசனில் கற்பித்த ஆசிரியரா? வெற்றிக்கு உரிமைகோருவதென்பதிலும் முரண்பாடு.
புலமைப்பரிசில் கூடுதலாக சித்தியடைந்துவிட்டால் அந்த பாடசாலையும் உரிமைகோருகின்ற அதேவேளை ரியுட்டரிகளும் உரிமைகோருகின்றன.பதாகைகள் பறக்கின்றன.
அந்த மாணவனைப்பற்றியோ பெற்றோரைப்பற்றியோ யாரும் சித்திப்பதில்லை.அந்த மாணவன் எடுத்த முயற்சியும் பயிற்சியும் என்பதை அத்தருணத்தில் இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.
பெற்றோராக மனமுவந்து ஏதாவது வழங்குவதென்பது தவிர்க்கமுடியாதது. ஆனால் ஆயிரக்கணக்கில் அறவிட்டு தங்கமாலை தங்கக்காப்பு வழங்குவதென்பது சிந்திக்கவேண்டிய விடயம். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் சுற்றுநிருபத்தை அமுல்படுத்தவேண்டிய அதிபர்கள் கல்வி அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே இதனை வழங்குவது. அவர்களுக்கும் ஒரு பொன்னாடை. இந்தக்கலாசாரம் தொடர்கிறது.
பாடசாலைகளில் நிதி அறிவிடுவதும் புலமைப்பரிசில் சித்திபெற்றவர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்படக்கூடாது என்று கல்வியமைச்சு சுற்றுநிருபங்கள் கூறுகின்றன.
ஆனால் அவை வெறும் சுற்றுநிருபங்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பது பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாகும்.
கல்வியமைச்சு இந்த விடயத்திலும் தலையிட்டு ஒரு சீர்திருத்தத்தைக்கொண்டுவரவேண் டும்.
இலவசக்கல்வி என்று கூறிவிட்டு இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது கண்டும் காணாமலிருப்பது எதிர்காலத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

