சென்ற வருடம் நடைபெற்று முடிந்த கல்விப்பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து ஒவ்வொரு பாடசாலையும் தங்களின் பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் இம்முறை 13 மாணவர்கள் ஏ தரசசித்திகளையும் 5 மாணவர்கள் 8 ஏ தரச்சித்திகளையும் 5 மாணவர்கள் 7 ஏ தரச்சித்திகளையும் பெற்றுக் கொண்டதுடன் அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகயும் பெற்று எமது கல்லூரியின் பெருமையினை பறைசாற்றயிருக்கின்றார்கள் என கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து ஆசிரியர்களையும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருந்து உழைத்த அனைத்து பெற்றோர்களையும் பாராட்டியதுடன் இனிவரும் காலங்களில் நடைபெறும் பரீட்சை முடிவுகளிலும் பெற்றோர் சமூகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்

